அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

help4web.net

தினமும் ஒரு திருக்குர்ஆன் வசனம்- அநியாயக்காரன் யார்?

அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? (அல்குர்ஆன்-2:140)

உரையாளர்கள்


Welcome to abuanu
Welcome to abuanu


Al Athar Islamic Radio from Kattankudy,Sri Lanka
abuanu Toolbar

Video Search:
Video Grabber! Add this video bookmark to your browser, and you can post videos to this channel instantly!
Magnify to abuanu
Right-click on this button to
add to favorites.

Download Athan (Azan) Software

Quran Auto Reciter 2.6 (FREE) for Windows 98/2000/XP/Vista/7

நன்மை,தீமை
நன்மை,தீமை
This collection is currently empty.
அண்ணல் வழியில் அருள்மிகு ரமழான்

                                   முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கிணங்க ரமழான் குறித்து இறைமறையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் என்ன கூறுகின்றார்கள் என சுருக்கமாக நோக்குவோம்.
அருள்மறையும் அருள்மிகு ரமழானும்

அருள்மிகு ரமழான் மாதத்தின் சிறப்புக்களில் மிக முக்கியமானது அகிலத்தாருக்கு வழிகாட்டியான அருள்மறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டதாகும். இது குறித்து திருமறைக்கு குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185) என்று கூறுகின்றது.

உலகப் பொதுமறை இறக்கியருளப்பட்ட அருள்மிகு ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது? என்கின்ற அர்த்தமற்ற, அறிவுபூர்வமற்ற வரட்டுச் சித்தாங்களை தூக்கி வீசிவிட்டு சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்ககூடிய, சிந்திக்கத் தூண்டக் கூடிய, இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டக் கூடிய அதிஅற்புத வேதத்தை  கற்று, அதன்படி செயற்பட்டு, அகிலத்தின் இரட்சகனின் அருளை அதிகமதிகம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இதோ அருள்மறை பேசுகின்றது.

‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)

‘இது (அழ்ழாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.’ (அல்குர்ஆன் 02:02)

இறையச்சமே இலக்கு

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அழ்ழாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:83)

மேலுள்ள அருள்மறை வசனம் ரமழான் மாத நோன்பு கட்டாயக் கடமை என்பதை உணர்த்துவதோடு, கடமையாக்கப்பட்டதற்கான காரணம் இறையச்சமே என்று எடுத்தியம்புகின்றது.

நோன்பு ஓர் கேடயம்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கின்ற கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அழ்ழாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அழ்ழாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1894)

மேலுள்ள நபிமொழி ‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்’ என்பதை மாத்திரமன்றி, ‘நோன்பாளியின் வாயிலிருந்து வருகின்ற வாடை கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்தது’ என்று கூறுவதன் மூலம் நோன்பாளியின் சிறப்பினை உணர்த்தி நிற்கின்ற அதே வேளை, ‘நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அருளாளன் விஷேடமாகக் குறிப்பிடுவதன் மூலம் நோன்பின் மகத்துவத்தினை உணர்ந்நது கொள்ளலாம்.
ரய்யான் நோன்பாளிகளுக்கே!

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”  (அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1896)

திறக்கப்படும் சுவன வாசல்கள்

“ரமழான் வந்துவிட்டால்  சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன எனஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1898)

விலங்கிடப்படும் ஷைத்தான்கள்

“ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1899)

பாவங்களுக்குப் பிரியாவிடை

“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)

மன்னிக்கப்படும் பாவங்கள்

“யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)

மழைக்காற்றை விட அதிகமாக வாரிவழங்கும் வள்ளல்

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள. வானவர் ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் சந்திக்கும் வேளையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை-  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களைச் சந்திப்பார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக் காற்றை விட, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)

ரமழானை ஆரம்பிப்பது எவ்வாறு?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:

01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:

“இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)

03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:

நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

இரவுத் தொழுகை நபிவழியும் புதுவழியும்

“நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)

மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.

ஆனால், அன்னையவர்கள் ’ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று  மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ, அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

ஆனால், நமது சமுதாய மக்கள் தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,

‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும்  மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக  நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

வெள்ளைக் கயிரும் கறுப்புக் கயிறும்

‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்:  அதீ பின் ஹாத்திம் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)

பரக்கத் மிக்க ஸஹர்

“நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் அருள்வளம் -பரக்கத்- இருக்கின்றது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1923)

நிய்யத்தை வாயால் மொழியலாமா?

நிய்யத் என்ற சொல்லுக்கு உள்ளத்தால் நினைத்தல் என்பதுவே பொருளாகும்.

மாறாக,  வாயால் மொழிதல் என்ற பொருள் கிடையாது. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்லி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா’  இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை நோற்பதற்கு நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக”

குறித்த செய்தியை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் ஒரு முறை கூட ஓதியதாக எந்த ஆதாரமும் கிடையாது.  மாறாக, குறி

நோன்பின் சட்டதிட்டங்கள் -- எம்.ஏ.ஹபீழ் ஸலபி (இலங்கை)
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும், தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)

நோன்பின் நோக்கம்:
‘யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி (ஸல் ) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ஸல் ), நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா.
‘நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால் – ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி ), நூல்: புகாரி, திர்மிதி.

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்:
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல் ) அவர்கள் கூறுகிறார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி.
‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி ), நூல்: புகாரி.

ரமழான் மாதத்தை தீர்மானம் செய்தல்:
‘நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால், ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹருக்கு அறிவிப்புச் செய்தல்:
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல் ) அவர்களால் செய்யப்பட்டிருந்தது. பிலால் (ரழி ), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி ) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல் ) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ.

ஸஹர் உணவு:
‘நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில், ஸஹர் நேர உணவில் பரகத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
‘நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறிஸ்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரழி ), நூல்: முஸ்லிம்.

குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்யலாமா?
‘ரமழான் மாதத்தில் நபி (ஸல் ) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ் நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்,

நிய்யத் வைத்தல்:
நிய்யத் என்பது வாயால் மொழிவதன்று, உள்ளத்தால் எண்ணுவதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை. பர்ழான நோன்பு நோற்கக்கூடியவர் முதல் நாள் இரவில் காலை நோன்பிருப்பேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’ ‘நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி…’ என்று மக்களால் சொல்லப்படும் நிய்யத்து நபி வழியல்ல. எனவே, நோன்பு நோற்கின்றேன் என மனதால் எண்ணிக்கொள்ள வேண்டும்.

நோன்பின் நேரம்:
சுப்ஹ் நேரம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது, சுப்ஹ் நேரம் துவங்கியது முதல், சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

உஷ்னத்தைத் தணிக்கலாமா?
‘நபி (ஸல் ) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது, வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.’ (நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ) எனவே, நோன்பாளி சூட்டை தணிப்பதற்காக குளிக்கலாம், தலையில் நீரை ஊற்றிக் கொள்ளலாம்.

நோன்பில் மறதியாகச் செய்யும் காரியத்திற்கு:
‘ஒரு நோன்பாளி மறதியாக ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், அல்லது பருகிவிட்டால், அவர் தனது நோன்பை நிறுத்திவிடாமல் பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும் என நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம். எனவே, நோன்பாளி மறதியாக உண்பதால் நோன்பு முறிந்து விடாது. வேண்டுமென்று யாராவது உண்டால், அல்லது பருகினால் நோன்பு முறிந்து விடும்.

பல்துலக்கலாமா?
‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்ல முடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.’ அறிவிப்பவர்: ஆமிர் (ஸல் ), நூல்: திர்மிதி. எனவே, நோன்புடன் பற்துலக்குவது நோன்பை முறித்துவிடாது.

உணவை ருசி பார்த்தல்:
உணவு சமைப்பவர்கள் சமைக்கும் போது, உணவுப் பொருட்களை ருசி பார்த்து விட்டு அந்த எச்சிலைத் துப்பிவிட வேண்டும்.

உறக்கத்தில் விந்து வெளியேறினால்:
‘நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி (ஸல் ) அவர்களிடம் கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது, அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ஸல் ), நூல்: அபூதாவூத்.
‘தூக்கத்தின்போது, (கனவில்) விந்து வெளிப்பட்டால், நோன்பை விட்டுவிட வேண்டாம் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: அபூதாவூத்) எனவே, நோன்பாளிக்கு உறக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடாது. சுயமாக யாராவது வெளியேற்றினால் நோன்பு முறிந்துவிடும்.

சுருமா, வாசனைப் பொருட்கள் பாவிக்கலாமா?
‘சுருமா, பூசிக்கொள்வதால் நோன்பு முறிந்து விடாது.’ (நூல்: புகாரி, திர்மிதி.) (வாசனைப் பொருட்கள், வைத்தியத்திற்காக ஊசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றாலும் நோன்பு முறியாது.)

நோன்பை முறிக்கும் செயல்கள்

உடலுறவு, உண்ணல், பருகல்:
ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும்.

மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
‘நோன்பாளி வுழூச் செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (ஸல்), நூல்: அபூதாவூத்.

இரத்தம் குத்தியெடுத்தல்:
‘இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜா (ரழி), நூல்: திர்மிதி.

வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
‘எவருக்கு வாந்தி வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ, அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்’ என்பது நபிமொழி.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி, அபூதாவூத்.
சிற்றின்பத்தின் மூலம் விந்து வெளிப்படல்:
ஒருவர் கட்டியணைத்தல், முத்தமிடல் போன்ற சிற்றின்பத்தில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் விந்து வெளிப்படும் எனில், அவரது நோன்பு முறிந்து விடுவதோடு, அவர் அதனை பின்னர் கழாச் செய்ய வேண்டும்.

உடலுறவு கொள்ளல்:
‘ஒரு நோன்பாளி (நோன்பு நோற்றது (ஸஹர்) முதல் மஃரிப் வரையுள்ள நேரத்தில்) உடலுறவு கொண்டால், நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும். நோன்புடனிருக்கும் போது, உறவு கொண்டால், அவருக்கான குற்றப்பரிகாரம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்:

•    ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
•    தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல்.
•    60 ஏழைகளுக்கு உணவளித்தல்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம்.

நோன்பு திறந்தது முதல், ஸஹர் நேரம் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

நோன்பை விடச் சலுகையுடையோர்

மாதவிடாய் பெண்களும், பிள்ளைப் பேற்று தாய்மார்களும்:
‘மாதவிடாய்ப் பெண்கள் நோன்பு நோற்பது ஹராம். ஒரு பெண் நோன்போடு இருக்கும் போது, நோன்பின் இறுதி சில நிமிடங்களுக்கு முன்னர் என்றாலும் சரி, மாதவிடாய் அல்லது நிபாஸ்|இரத்தம் வருமெனில், அவளது நோன்பு முறிந்து விடும். அவள் அதனைப் பின்னர் கழாச் செய்யவேண்டும்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி ), நூல்: புகாரி, முஸ்லிம்.
பிரயாணியும் நோயாளியும்:
‘எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருந்தால், (ரமழானில் பிடிக்காத நோன்புகளை) மற்ற நாட்களை எண்ணி (நோற்று) விடவும்’ (அல்குர்ஆன் 2:184) இவ்வசனம் நோயாளியும், பிரயாணியும் ரமழானில் நோன்பை விட்டு விட்டு, ஏனைய மாதங்களில் பிடிக்க அனுமதியளிக்கிறது.

முதியோர்:
‘ரமழான் காலத்தில் நோன்பை விட்டு விட வயது சென்ற முதியவர்களுக்கும், தீராத நோயாளிகளுக்கும் அனுமதி உண்டு. முதுமை என்பது நீங்கக் கூடியதல்ல. தீராத நோயுடையோரது நிலையும் இதுதான். இப்படியான நிலையில் உள்ளவர்கள் விடும் ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரம் (பித்யா) ஒரு ஏழை வீதம் ஒவ்வொரு நாளும் உணவளிக்க வேண்டும்.’ அறிவிப்பவர்: அனஸ் (ரழி ), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும்:

‘கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நபி (ஸல் ) அவர்கள் நோன்பில் சலுகை அளித்தார்கள். கர்ப்பத்தில் உள்ள சிசுவும், பால் அருந்தும் குழந்தையும் பாதிக்கப்படலாம் என அஞ்சும் தாய்மார்கள் நோன்பை விட்டĬ
நோன்பின் சட்டங்கள்
நோன்பின் சட்டங்கள்
This collection is currently empty.
முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம்
முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம்
This collection is currently empty.
இளைஞர்களே உங்களைத்தான்...........
இளைஞர்களே உங்களைத்தான்...........
This collection is currently empty.
பயங்கரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா?
பயங்கரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா?
This collection is currently empty.
இன்றைய சூழலில் முஸ்லிம்கள்
இன்றைய சூழலில் முஸ்லிம்கள்
This collection is currently empty.
மரணப்பிடியில் மனிதனின் நிலை
மரணப்பிடியில் மனிதனின் நிலை
This collection is currently empty.
அல்-குர்ஆனின் அற்புதங்கள்
அல்-குர்ஆனின் அற்புதங்கள் | Pages: 1 2
மனித மூளையின் அற்புதங்கள்
மனித மூளையின் அற்புதங்கள் | Pages: 1
காலடித்தடங்கள்
காலடித்தடங்கள்
This collection is currently empty.
வித்துக்களின் அதிசயம்
வித்துக்களின் அதிசயம்
This collection is currently empty.